சம கால கல்வி செயல்நெறியில் மிக முக்கிய பிரயோகமாக பாடசாலைக் கல்வி முதன்மை வகிக்கின்றது. அறிவாற்றல்களுடன் மாணவரின் விருத்திக்கு உதவக்கூடிய உளளெழுச்சிப் பண்புகள், சமூகத்திறன்கள், ஆளுமைப் பண்புகள் போன்றவற்றை பாடசாலையே வளர்த்தெடுக்கின்றது. அந்த வகையில் நாட்டில் சுமார் 150 வருடங்களாக உழைக்கும் இயந்திரங்களாக கல்வி துறையில் பின்தங்கியவர்களாக இருந்த மலையக மக்கள் சமூகத்தினரிடையே கல்வி எனும் மின்சாரத்தினால் அறிவொளிப் பெற்று தலைநிமிர்ந்து வாழ வழி சமைத்த பாடசாலைகளுள் ஒன்றாக ப/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி மிளிர்கின்றது. தனது கல்விச் சேவையில் மாணவர்களின் பல்துறை சாதனைகளை நிலைநாட்டியுள்ள இப்பாடசாலை இன்று 84 ஆண்டுகள் பூர்த்தியடைந்து வீரு நடை போடுவதையிட்டு உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். அத்தோடு பாடசாலைக்கான இணையத்தளம் உருவாக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்த கல்வித்திணைக்களத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இக்கல்லூரி பல வளர்ச்சிப் படிகளை கடந்து உயர்ச்சிப்பெற்று விளங்குவதற்கு மென்மேலும் அயராது உழைத்து வருகின்ற அதிபர், ஆசிரியர், மாணவர்கள்,பெற்றோர் நலன் விரும்பிகள் உள்ளிட்ட கல்வி உரித்தாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
உதவி அதிபர்
திரு.S.K.நாகராஜா
ப/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி