(+94) 573001818
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • Register
  • Login
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்
  • SCHOOL MAP

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • நிறுவனர்கள்
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. வரலாறு மற்றும் மரபுகள்
  4. வரலாறு

வரலாறு

 

 

1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  06 ஆம்  திகதியன்று ஊவாஹைலண்ட்ஸ் தோட்டத்தில் (இன்று ப/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு இயங்கும் கட்டிடம்) ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை அன்று ஆங்கிலேயரால் ஆட்சி காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பெரிய கங்காணிமார்களின் பேராதரவுடனும், வழிகாட்டலுடனும் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

           இப் பாடசாலைகளிலே கல்விப் பயிலுகின்ற மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் தேவைப்பாடுகளை அவ்வப்போது தோட்ட முகாமைத்துவத்திற்கு எடுத்துரைப்பதில் அக்கரை காட்டுபவர்களாக பெரிய கங்காணிமார்கள் திகழ்கின்றனர். இவர்களில் பலர் இருந்த போதிலும் திரு. ஆண்டான் கதிர்வேல் கங்காணி குறிப்பிடத்தக்கவராவார். இது தொடர்பாக அனேகமான தகவல்கள் பேசப்படுகின்ற போதிலும் ஆவணப்படுத்தக்கூடிய வகையில் நோக்குமிடத்து சில விடயங்களை மட்டுமே குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

       பாடசாலையின் ஆரம்பத்தில் ஓரளவு அறிவாற்றல் கொண்ட சமூக நன்மதிப்பைப் பெற்றிருந்த உடல் நிலையில் சிறிதளவு ஊனமான திரு.லெட்சுமணன் அவர்களே கடமையாற்றினார். இவரது கால் ஊனமாக காணப்பட்டமையால் இவரை எல்லோரும் ‘நொண்டி வாத்தியார்’ என்று அழைத்தனர்.

          இவரின் பின்னர் திரு.பொன்னையா வாத்தியார் நியமிக்கப்ப்பட்டார். இவரது காலத்தில்  எண்ணும், எழுத்தும், கலைகளும் அடிப்படை கல்வியாக கற்பிக்கப்பட்டது. அதன் பின்னர் திரு.டானியல் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் வாண்மைத்துவமுள்ள ஒரு நபராக இருந்துள்ளார். தோட்ட முகாமைத்துவத்திடமும், பிரதேசவாழ் மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். இக்காலத்தில் ஆண்டான் கதிர்வேல் கங்காணி அவர்களின் பேராதரவு இப்பாடசாலையின் நிர்வாகத்திற்கு  உறுதுணையாக இருந்துள்ளது.

           1950ம் ஆண்டு தொடக்கம் 1965ம் ஆண்டு வரையான காலப்பகுதியிலே திரு.டானியல் அவர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். அத்தோடு திரு.கதிர்வேல் கங்காணியின் மகன் திரு.வாசகம் அவர்களும் அவரிடமே ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார். தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் இவருக்கு நன்மதிப்பு மிகையாக காணப்பட்டதுடன் ஜமூரிமார் சபையில் அங்கத்தவராகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையுமே தோட்ட நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. இவரது காலம் இப்பிரதேசத்திற்கு வசந்த காலமாகவே திகழ்ந்துள்ளது எனலாம்.

               இவரது இடமாற்றத்தின் பின்னர் திரு.இரத்தினசாமி அவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். இதன் முலம் திருமதி.இராமநாதன், திரு.இராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டனர். இவர்களில் திரு.இராமநாதன் அவர்கள் புதுமலை பிரிவில் இயங்கிய பாடசாலையில் கடமையாற்றியதாக அறிய முடிகிறது. இப் பாடசாலைகள் இரண்டும் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளை கொண்டதாகக் காணப்பட்டது. இந்த நிலையில் திரு. P.நவரட்ணம் அவர்கள் உதவியாசிரியராக இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். தாய் பாடசாலையாக ஊவாஹலண்டஸ் பாடசாலையே திகழ்ந்துள்ளது. இக்காலத்தில் மாணவர்களுடைய கற்றல் தேவைப்பாடு கருதி திருமதி. K.V.N. ஜோசப் அவர்கள் புதுமலை பிரிவு பாடசாலைக்கு உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய திரு.P.நவரட்ணம் அவர்கள் தாய் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

              இக்காலக்கட்டத்தில் தான் பெருந்தோட்டதுறை சார்ந்த கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட அரும்பு முளைத்த காலம் என இவ்வூர் பெரியோர்கள் கூறுவார்கள். காரணம் தோட்டப்புறப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும்  செயல்திட்டங்கள் மிக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீரோட்டத்தில் தோட்டப்புறப்பாடசாலைகள் இணையப்போகும் கனவு நனவாகும் நிலை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அன்று அக்காலக்கட்டத்தில் பாராளுமன்றத்தில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, இலங்கை தொழிலாளர் காங்கிரசினுடைய பெருந்தலைவராக திகழ்ந்த மாமனிதர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் விடுக்கப்பட்ட மசூதாவிற்கு பிரதிபலனாக 1977-01-10 ஆந் திகதி இப்பாடசாலையை அரசு பொறுப்பேற்றுக் கொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது. இதன் பின்னர் 1978-03-09 ஆம் திகதி வரை திருமதி.     D. இராமநாதன் அவர்கள் அதிபராக இருந்துள்ளார். இவரைத்தொடர்ந்து 1978-09-10 ஆம் திகதி முதல் N. திருச்செல்வம் அவர்கள்  பாடசாலை பொறுப்புக்களை ஏற்றுள்ளார். அதன் பிறகு உதவி ஆசிரியராக இருந்த திரு. P. நவரட்ணம் அவர்கள் 1978-03-04 ஆம் திகதி முதல் 1980-04-25 வரை பாடசாலை பொறுப்புக்களை ஏற்று நிறுவகித்துள்ளார்.

          இக் காலகட்டத்தில் பாடசாலையினுடைய மாணவர் பரம்பலுக்கு ஏற்ப இடவசதி குறைவாகக் காணப்பட்டமையினால் தோட்ட முகாமையாளராக இருந்த திரு.கூல்மேயர் அவர்களிடம் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் விடுத்த கேகாரிக்கையின் விளைவாக காணித்துண்டு ஒன்று வழங்கப் பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் பல்வேறுபட்;ட இடர்பாடு களுக்கு முகம் கொடுத்தே இப்பாடசாலை கட்டிடம் (தற்போதைய டீ கட்டிடம்) நிர்மாணிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இந்நிலையில் அருட்சகோதரர்  ஜோன் மடவெல அவர்கள் இப்பாடசாலையின் நலன் விரும்பியாக செயல்பட்டு இன்னோரன்ன உதவிகளை செய்துள்ளார்.

            பாடசாலையை அரசு சுவீகரித்த பின்னர் தான் கல்வி அமைச்சின் பாடவிதானம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கற்றல் சாதனங்கள் வழங்கப் பட்டது. எனினும் கற்றல் மேற்பார்வை முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டுதான் மேலதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. இப்பாடசாலை ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கனி~;ட வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது.

           1980-09-26 ஆம் திகதி முதல் திரு.ளு.மு.செல்வரட்ணம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 08 வரையிலான வகுப்புகளை நடாத்துவதற்கு இக்காலத்திலே அனுமதி கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் புதுயுகம், புதிய பொழிவு இப்பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலை போஷனை  பிரதேசத்திலுள்ள அனைத்து மாணவர் களையும் சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தேவையான ஆசிரியர் வளம், பௌதிக வளங்;கள்  கல்வி திணைக்களத்தினால் அவ்வப்போது வழஙகப் பட்டது. பாடசாலை சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது இக்காலமே. இவர் 1982-12-31 ஆம் திகதியன்று ஓய்வு பெற்றார்.

                 இதன் பின்னர் 1983-01-01 திகதி முதல் திரு. ளு. ஆ. கந்தையா அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். சிறந்த தலைமைத்துவமும், அனுபவமும் கொண்ட இவர் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து பாடசாலையை வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பாடசாலை ஆசிரியர்கள் திடீரென்று தத்தம் ஊர்களுக்கு சென்றதனால் கற்றல் செயல்பாடு சற்று பின்னடைவை நோக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. எனினும் இருக்கின்ற ஆசிரியர் வளத்தைக் கொண்டு 1984-09-04 ஆம் திகதி வரை சிறந்த முறையில் பாடசாலையை நிருவகித்த பெருமை இவருக்குரியதாகும். இதற்கு முன்பதாக புதுமலையில் இயங்கி வந்த பாடசாலையை மூடப்பட்டு, இங்கு பணியாற்றிய உதவியாசிரியை திருமதி.மு.ஏ.N.ஜோசப் அவர்கள் தாய் பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டிருந்தார்.

                இதனைத் தொடர்ந்து திரு.ளு.செல்வரட்ணம் அவர்கள் 1984-09-05ம் திகதி முதல் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலமே இப்பாடசாலை வரலாற்றில் பொற்காலம் என்று பேசப்படுகிறது. கற்றல், கற்பித்தல், திறன்விருத்தி, இணைப் பாடவிதான செயற்பாடுகள், பாடசாலைக்கான மனிதவளம், பௌதீகவளம் பெற்றுக்கொண்டமை, வாண்மைமிகு பரிபாலணம், பாடசாலைக்கான தனியொரு நன்மதிப்பு, பாடசாலைக்கீதம் இயற்றப்படல், இலட்சினை தயாரிக்கப்படல் போன்ற நடவடிக்கைகள் மிக உயர்வான மட்டத்தில் நடைபெற்ற காலமெனக் கூறலாம். தனக்கென முத்திரைப் பதித்து பாடசாலை நிர்வாகத்தை நடாத்திச் சென்ற இவருக்கு கல்வி திணைக்களம், பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் போன்றோர் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். முதன் முதலில் 1986 ஆம் ஆண்டே க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சைக்கு 15 மாணவர்களை உயர் தரத்திற்கு தயார்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இப்பரீட்சையில் மூன்று மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகினர். இவர்களில் பாடசாலை சிரே~;ட மாணவ தலைவராக இருந்த மலையப்பன் தியாகராஜா அவர்கள் விN~ட திறமை சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு முதல் பெருமை தேடிக்கொடுத்தது சிறப்பம்சமாகும்.அதேபோல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கும் 1988 ஆம் ஆண்டே முதன் முதலில் மாணவர்கள் தோற்றியிருக்கின்றார்கள். இவர்களில் செல்வி.ஏ.மஞ்சுளாதேவி மாவட்டத்தில் 32வது இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பாடசாலைக்கீதம் திரு.மலைக்கொழுந்து சண்முகநாதன் அவர்களால் இயற்றப்பட்டு, திருமதி ~hமினி இராமநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சாதனைகள் பல செய்து சிறந்த கற்றல் வெளியீடுகளை கொடுத்த சாதனைக்குரிய அதிபராக திகழ்ந்த இவர், பண்டாரவளை கல்வி காரியாலயத்திற்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றார்.

              இதை தொடர்ந்து 1992-10-10ம் திகதி முதல் திருமதி வு.செல்வரட்ணம் அவர்கள் பாடசாலை நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இவரது காலமும் கனிசமான வளர்ச்சிக் கண்ட காலம் என்றே கூற வேண்டும். இவரது சேவைக் காலத்தில் முழு நேரத்தையும் பாடசாலையினுடைய வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்த பெருந்தகையாக பேசப்படுகிறது. 1995-03-01 ஆந் திகதி மகா வித்தியாலயமாக மாற்றம் பெற்றது. இரு மாடிக் கட்டிடம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், ஆசிரியர் விடுதி அதே போல் க.பொ.த உயர்தர கலை, வர்த்தக பிரிவுகளை 1998ம் ஆண்டு ஆரம்பித்தல், தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளில்  மாவட்ட மட்டத்தில் முதல் வரிசை இடங்களை பெறக்கூடிய வாய்ப்பு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறுவோர் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்களில் அதி கூடிய கவனம் காட்டினார். 1998-12-16 ஆந் திகதி ஐஊ பாடசாலையாக மாற்றம் பெற்றது. பாடசாலையை வெற்றிப் பாதையை நோக்கி இட்டுச் சென்ற இவர் 1999-08-25ம் திகதி முதல் பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்திற்கு  இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவரது காலக்கட்டத்தில் உதவியாசிரியராக பணியாற்றிய திரு.ளு.பிரபாகரன் அவர்கள் பாடசாலை ஒழுக்கம், கற்றல், கற்பித்தல், விளையாட்டு இணைப்பாடவிதானங்களை விருத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

           இதன்  பின்னர் திருமதி. லு. கலையரசி அவர்கள் 1999-08-26 ஆம் திகதி முதல்  2001-05-16 ஆம் திகதி வரை அதிபராகக் கடமையாற்றினார். சிறிது காலம் பாடசாலை பொறுப்பை நிருவகித்தாலும் சிறந்த முகாமைத்துவ ஆளுமை கொண்டவராக சகல துறை களிலும் பாடசாலையை வழிநடத்திச் சென்றார். இவருடைய  காலத்தில் முதன் முறையாக பாடசாலைக் கான கணினித்தொகுதி ஒன்றும், மேலைத்தேய இசைக்கருவி ஒன்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ஆ.சச்சிதானந்தன் அவர்களால் வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கொழும்பு சிங்க சங்கத்தின் உதவியோடு பாடசாலை உபகரணங்கள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தார். இவர் ஹாலி-எல வலயக்கல்வி காரியாலயத்திற்கு பதவியுயர்வு பெற்று சென்றரர்.

            அதன் பின்னர் 2001-05-17ம் திகதி முதல் திருமதி.நு.ஏ.சு.சாமுவேல் அவர்கள் பாடசாலை பெறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். பாடசாலையின் வளர்ச்சி சகல துறைகளிலும் ஆர்முடுகளாகவே இருந்தது. இந் நிலைக்கண்டு பாடசாலை தொடர்புபட்ட நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதில் பின் நிற்கவில்லை. நவேதயா பாடசாலையாக கல்வி அமைச்சின் மூலம் தரம் உயர்த்தும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தமை பெருமைக்குரியதாகும். இளம் சிறார்களின் முன்பள்ளி கற்றலை தூண்டும் நல் நோக்கம் கருதி பாடசாலை வளாகத்தில் வசந்தம் முன்பள்ளியினை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சக ஆசிரியர் சமூகம், மாணவர்கள், பாடசாலை சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஒன்றினைந்து செயற்பட்ட இக்காலக்கட்டத்தில் தான் பாடசாலை  வரலாற்றில் முதன் முறையாக கலைத்துறைக்கு செல்வன்.ளு.சுரேஸ்குமார் அவர்களையும், வர்த்தக துறைக்கு செல்வன். N.ராஜசேகரன் அவர்களையும் பல்கலைக்கழகம் அனுப்ப கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதே போல் கல்வியற் கல்லூரிகளுக்கு பல மாணவர்கள் தெரிவாகினர். கல்வித்துறையில் புரட்சி ஏற்படுவதற்கும், தகவல் தொழிநுட்ப துறை ஆரம்பத்திற்கு அடித்தளமிட்ட காலப்பகுதியாகும். இந்நிலையில் இன்னோரான்ன வழிகளில் பாடசாலையினுடைய வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கல்வி அமைச்சினூடாக அசையாசொத்துகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  2007-04-30 ஆந் திகதி நவோத்யா பாடசாலையாக மாற்றம் பெற்றது.

          இவரின் காலத்தில்; பிரதி அதிபராக கடமையாற்றிய  திருமதி. S. செல்வராஜ் அவர்களின் அர்ப்பணிப்புடைய சேவை முழுமையாக கிடைக்கப்பெற்றமையும் அதன் பயனை பாடசாலை மாணவர்கள் அனுபவித்ததையும் குறிப்பிடத்தக்கது. இவர்      2008-02-14ம் திகதியன்று ஓய்வுப் பெற்றுச் சென்றார்.

          அதை தொடர்ந்து அதிபர்  தற்போதைய திரு. S. கண்ணியமூர்த்தி அவர்கள் 2008-02-15 ஆந் திகதி அதிபராக பாடசாலைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். சவால்கள் மிகுந்த காலமாக இருந்த போதிலும் வாண்மைத்துவமும், ஆளுமைத்திறனும் கொண்ட இவர் அவற்றை வெற்றிக்கொண்டு பாடசாலையை சகல துறைகளிலும் அபிவிருத்;தி பாதை நோக்கி கொண்டு செல்வதில் துடிப்பும், துணிவும் கொண்டவராக  திகழ்கின்றார். பாடசாலையை வினைத்திறன் மிகு நிறுவனமாக்குவதே இவரது நோக்கு. இதனடிப்படையில் சக ஆசிரியர் குழாத்தினதும், பாடசாலை அபிவிருத்தி சங்கஉறுப்பினர்களதும், மாணவர்களின தும் ஆலோசனைகளை  அவ்வப்போது பெற்று செயல்திட்டங்களை தயார்ப் படுத்தி நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதில் தலைசிறந்தவராக இருக்கின் றார். இவரது காலம் கல்வித்துறையிலும், இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும், பாடசாலை பௌதீக வள, மனித வளதுறைகளிலும் உச்சக்கட்ட தொழிநுட்ப அறிவை பெரும்பான்மையான மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில்  இத்துறைக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை தயார்படுத்தி நாடளாவிய மட்டத்தில் சாதனைகள் பல புரிவதற்கு வித்திட்டவர் ஆவார். இதன் காரணமாக பிரதிக்கல்வி அமைச்சர் கௌரவ ஆ. சச்சிதானந்தன் அவர்களின் மூலம் மடிக் கணினிகள் (Laptop 20 ஐயும், கணனி தொகுதிக்கான உபகரணங்களையும் அதிகளவில் பெற்றுக் கொடுத்துள்ளார். கற்றலில் ஈடுபடும் மாணவர்கள் மத்தியில் பாடத்துறை வளர்ச்சிக்கு புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது காலத்திலே கணனி மென் பொருள் தயாரிப்பதில் எமது பாடசாலை மாணவர்கள் மூவர் மாவட்ட மட்ட பரிசில்களையும், இருவர் தேசிய மட்ட பரிசிலினையும் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

                சாரணர் துறையில் அதி ஆர்வம் கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டு சாரணர் குழு ஒன்றினை பாடசாலையில் ஆரம்பித்ததோடு அவர்களை தேசிய, சர்வதேச ஜம்போரிகளில் பங்கெடுப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளார். சிறந்த சாரணர் சேவையாளருக்கான விருதையும் இவர் பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும். பதுளை மாவட்டத்தில் முதல் பெண்கள் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவரும் இவரே. எமது பாடசாலையின் பெண்கள் சாரணீயக்குழுவுக்கு பொறுப்பான ஆசிரியையான திரு. M. சாந்தி ‘தருசின்னம் (Wood Badge)’ பெற்றுக் கொண்டவர் ஆவார். 2009 ஆம் ஆண்டு சாரணியக்குழு இந்தியா சுற்றுலாவில் கலந்து கொண்டது. 

       அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பிட்ட விடயங்களில் 100மூ அடைவு மட்டத்தை அடைய கூடிய வாய்ப்பினை பெற்றமை பெருமைக்குரியதாகும். இவரது இலக்கு நோக்கிய பயணத்தை அடைவதற்கு அயராது, அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இவரை கல்வி அமைச்சு மாகாணத்தில் சிறந்த அதிபராக தெரிவு செய்து ‘குரு பிரதீபா விருது - 2012’ வழங்கி கௌரவித்தது. மேலும் 2013 ஆம் ஆண்டிலும், 2016 ஆம் ஆண்டிலும் சிறந்த அதிபராக தெரிவு செய்யப்பட்டு ‘குரு பிரதீபா பிரபா விருது’ வழங்கப்பட்டது. அத்தோடு எமது பாடசாலையின் ஆசிரியர் திரு.R.ரஜீவ்காந்திக்கு சிறந்த ஆசிரியருக்கான ‘குரு பிரதீபா பிரபா விருது’ விருது கிடைத்தது.

      அதே போல் முன்னால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ‘1000 பாடசாலைகள்’ அபிவிருத்தி செயல் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளிலே எமது பாடசாலையும் உள்வாங்கக்கூடிய வாய்ப்பினை பெற்றுக் கொண்டது. இதனூடாக ஏறக்குறைய ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘மஹிந்தோய தகவல் தொழினுட்ப பிரிவு’ எமது பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றது. வேளைகள் பூர்த்தி செய்யபட்டு 2014.09.12 ஆந் திகதி முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.

         இதனை அடிப்படையாகக் கொண்டு தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் வேப்பஸ்சாவெல ஸ்ரீநிவாச மகா வித்தியாலமான சிங்கள பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 2012-01-03 ஆந் திகதி தொடக்கம் இடைநிலை பாடசாலையாக மாற்றப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் தகவல் தொழினுட்ப துறையில் கொண்டிருக்கின்ற ஆர்வம் அதன் ஊடான வெளியீடுகளை மையமாகக் கொண்டு ஆழுவுர்நுசு ளுசுஐ டுயுNமுயு நிகழ்ச்சித்திட்டத் திட்டம்,பலன்தரு பாடசாலை செயற்றிட்டம், நு-ஏடைடயபந செயற்றிட்டம் ஆகியவற்றுக்கு எமது பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளது.

           2013 ஆம் ஆண்டு Mother Sri Lanka (RUN) நிகழ்ச்சித்திட்டத் தில் 3 ஆம் இடம் கிடைத்தது. எமது பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆங்கிலத்துறைசார் செயல்திட்டங்களை ஆதாரமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டு சர்வதேச பாடசாலை விருது (International School Award 2011-2015) கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

               அத்தோடு இணைபாட விதான செயற்பாடுகளிலும் பல்வேறு தொடர்தேர்ச்சி யான வெற்றிகளை மாணவர்கள் பெற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடக் கூடிய விடயமாகும். அந்த வகையில் அதிபரின் வழிகாட்டலின் கீழ் ஆசிரியர்க் குழாத்தினரின் அர்ப்பணிப்பினாலும் 2009 ஆம் ஆண்டு தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டி பேச்சுப்போட்டியில் மூன்றாம் இடத்தினையும், 2012 ஆம் ஆண்டு தேசிய மட்ட தமிழ்த்தினப்போட்டி பேச்சுப்போட்டியில் மூன்றாம் இடத்தினையும், 2013 ஆம் ஆண்டு தேசிய மட்ட தமிழ்த்தின விவாதப்போட்டியில் முதலாம் இடமும், 2014 ஆம் ஆண்டு 3 ஆம் பிரிவு கட்டுரைப்போட்டியில் முதலாம் இடமும், 4 ஆம் பிரிவு இலக்கணப் போட்டியில் இரண்டாம் இடமும், 2015 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் ஏழு முதலிடங்களையும் மாகாண மட்டத்தில் 6 முதலிடங்களையும் பெற்றுக் கொண்டனர். 2016 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டியில் கோட்ட மட்டத்தில் ஏழு முதலிடங்களையும், ஒரு இரண்டாம் இடமும், இரு மூன்றாம் இடமும் கிடைத்தது. வலய மட்டத்தில் 5 முதலாம் இடமும், 3 இரண்டாம் இடமும், ஒரு மூனறாம் இடமும் கிடைத்தது. மாகாண மட்டத்தில் 4 முதலாம் இடமும் ஒரு 2 ஆம் இடமும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகினர். 2017 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தேசிய நிலை தமிழ்த்தினப்போட்டியில் நான்காம் பிரிவு பேச்சுப்போட்டியில் சு.தனுஷா என்ற மாணவி முதலிடத்தினைப் பெற்று ஊவா மாகாணத்துக்குப் பெருமை சேரத்துள்ளார்.

      2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எமது பாடசாலையின் ஆசிரியர்களான திரு.N.கலைவாணர் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினையும்,        திரு.R. ரஜீவ்காந்தி சிறுகதைப் போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்று பாடசாலை க்கு  பெருமை சேர்த்ததுடன் கலை, கலாசார நிகழ்ச்சி ஒன்றும் பாடசாலை மாணவர்களினால்  அரங்கேற்றப்பட்டது.

2013 ஆம் ஆண்டு ஆங்கில மொழித்தினப்போட்டியில் ஊசநயவiஎந றுசவைiபெ மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றது. அத்தோடு 2014 ஆம் ஆண்டு மாகாண மட்ட சமூகக்கல்வி போட்டியில் முதலாம் இடமும் கிடைத்தது. மேலும் 2014 ஆம் ஆண்டு தேசத்தின் மகுடம் மாகாண மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலையின் கரப்பந்தாட்டக் குழு முதலாம் இடத்தைச்சுவிகரித்துக் கொண்டது. 

              2011-2012 ஆண்டுக்கான ஊவா மாகாண உற்பத்தித்திறன் போட்டியில் சிரேஸ்ட பாடசாலைப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அதே போல் 2014, 2015 ஆம் ஆண்டுகளில் விசேட விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

         க.பொ.த(சா.த) பரீட்சைப்பெறுபேற்றினைப் பொருத்த வரையில் 1988 ஆம் ஆண்டு முதல் வகுப்பு நடாத்தப்பட்ட போதிலும் பாடசாலை வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டு 66மூ வீதமே அதிவுயர் பெறுபேறாக இருந்தது. 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறுபேறு படிப்படியாக குறைந்து 2006 ஆம் ஆண்டு 7மூ வீதமாகக் குறைந்து மிகக் குறைந்த பெறுபேறாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஆசிரியர் பற்றாக்குறை, பாடத்திற்கு பொருத்தமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்மை, போன்ற பல சவால்களுடன் அதிபரின் முயற்சியும் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்பும் காரணமாக பெறுபேறு உயர்த்தப்பட்டு 2016 ஆம் 84மூ வீதத்துக்கு பெற்றுக்கொண்டு மாகாண தேசிய பெறுபேற்றை விட அதிக பெறுபேற்றை பெறக் கூடியதாகவுள்ளது. மேலும் க.பொ.த.(சா.த.) வகுப்பில் பிரதான பாடங்கள் உட்பட 20 பாடங்கள் எமது பாடசாலையில் கற்பிக்கப்படுகிறது. அவற்றில் 9 பாடங்கள் 100மூ பெறுபேற்றையும் 7 பாடங்கள் 90% அதிகமான பெறுபேற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு வகுப்பு ரீதியாக ஆசிரியர்கள் தனது பாடத்தில் 100% பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

                  எமது பாடசாலையைப் பொறுத்தவரையில் பாடசாலை அதிபர் தனது நிர்வாகம், முகாமைத்துவம் போன்ற பணிகளை சிறப்பாக செய்வதோடு கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சிறப்பம்சமாகும். விவசாயம், சுகாதாரம் போன்ற பாடங்கள் அவரின் திறமையை மேலும் வலுவூட்டியுள்ளார். 2016 அம் ஆண்டு சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்தில் 98மூ பெறுபேற்றை பெற்றுள்ளார். அதே போல 2010 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் விவசாய பாடத்தை எமது பாடசாலையின் பாடசாலையில் விவசாய பாட ஆசிரியர் இல்லாத போதிலும் மாணவர்களின்  நன்மை கருதி அதிபர் அப்பாடத்தை முதன் முதல் ஆரம்பித்து 15 மாணவர்களை பரீட்சைக்கு தோற்றச் செய்து 8யுஇ4டீஇ3ஊ என்ற பெறுபேற்றைப் பெற்று சாதித்துள்ளனர்.

 

அத்தோடு எதிர்காலத்தில் வருடாந்தம் இரண்டு மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் அதிபர் செயற்படுகின்றார்;.

அந்த வகையில் 2012 அம் ஆண்டு செல்வன்.ளு.காளிதாசன் கிழக்குப் பல் கலைகழகத்துக்கு கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வர்த்தகப்பிரிவில் செல்வி.ளு.தர~;னி (யாழ் பல்கலை கழகம்), செல்வி.V.ஜனனி (ரஜரட்டபல்கலைகழகம்) செல்வி. S. விஜயசாந்தி (யாழ் பல்கலை கழகம்) ஆகிய 3 மாணவர்கள் பல்கலைகழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.  செல்வன் ளு.கிருந்தன் கல்வியியல் கல்லூரி தகவல் தொழிநுட்ப கற்கை நெறிக்கும் (ICT) செல்வி. ளு. கலைவாணி வவுனியா கல்வியியற் கல்லூரியின் வணிகக் கல்வி துறைக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

க.பொ.த உயர்தர வகுப்பைப் பொருத்தவரையில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. 1998 முதல் 2011 வரை வர்த்தகப் பிரிவில் ஒரு மாணவரும் கலைப்பிரிவில் ஒரு மாணவரும் மாத்திரமே பல்கலைகழகம் சென்றுள்ளனர். வர்த்தகத்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு அமையாதது கவலைக்குரிய விடயமாகும். 2008ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அதிபர் க.பொ.த.சாதாரண தரம், உயர்தரம் ஆகியவற்றின் பலவீனத்தை ஆராய்ந்து பலமுயற்சி செய்ததோடு 2008 முதல் மூன்று வருடகாலம் மாணவர்களின் ஒழுங்கு, ஆசிரியர்களின் ஒழுங்கு போன்றவற்றிற்கு மிக சிரமப்பட வேண்டியிருந்தது.

அதே போல் அடிப்படை பௌதீக வள வசதிகளை பெற்றுக் கொள்ள பெருமுயற்சி மேற்கொண்டதுடன், இம்முயற்சிகளில்; வெற்றி கண்டதன் பயனாக 2011ம் ஆண்டு முதல் பல்கலைகழக பிரவேசமும் படிப்படியாக அதிகரித்ததோடு பெறுபேற்றில் பெருமிதம் அடையும் அளவிற்கு எமது பாடசாலை 2016ஆம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைப் பெறுபேற்;றை பரீட்சைத்திணைக்களம் தரவரிசைப்படுத்தும் போது அகில இலங்கை ரீதியில் 50 பாடசாலைகளுக்குள் (Top10) தெரிவு செய்திருக்கின்றது. இதனடிப்படையில் எமது பாடசாலை 46 வது இடத்தை பிடித்ததோடு ஊவா மாகாணத்தில் Top 50யில் உள்வாங்கப்பட்ட முதலாவது தமிழ் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

                 மேலும் 2016ம் ஆண்டில் பரீட்சை பெறுபேற்றுக்கு  அமைய கலைப்பிரிவு மாவட்டத்தின் நிலையில் (னுளைவசiஉ சுயமெ) 3வது இடத்தை பெற்றதோடு எமது பாடசாலை மாகாணத்தில் TOP 10 பாடசாலையில் உள்வாங்கப்பட்டதோடு அதிபருக்கு சாதனை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் 2016 ஆண்டு பெருந்தோட்டத் துறைக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்தின் போது ஊவா மாகாணத்தில் 500 பேருக்கு வழங்கப்பட்டது. அவற்றில் எமது பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு நியமனம் கிடைத்தது ஒரு சிறப்பம்சமாகும். அதே போன்று 2010 ஆன்டு அதிபரிடம் விவசாய பாடம் கற்ற செல்வி. K.ஜனோசினி என்ற மாணவி எமது பாடசாலை விவசாய பாட ஆசிரியராக நியமிக்கப் பட்டுள்ளமையும் சுகாதாரம் கற்ற மாணவி செல்வி. S. ஸ்ரீதேவி சுகாதார பாட ஆசிரியராக எமது பாடசாலைக்கு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 2015 ஆம் ஆண்டு P. லினோதர்~ன் (பேராதனைப் பல்கலைக் கழகம்), P.திவ்யதர்~னி (பேராதனைப் பல்கலைக்கழகம்) சு. சுலக்~னா (கிழக்கு பல் கலைக்கழகம்) மு. நிரோ~ன் (தென் கிழக்கு பல்கலைக் கழகம்) ஆகிய 4 மாணவர்கள் பல்கலைகழகத்துக்கும் கலைப் பிரிவுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு வு. தனுசப்பிரியா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் பதுளை மாவட்டத்தில் 3வது இடத்தினையும் ளு. ரம்யன் (கிழக்கு பல்கலைக்கழகம்) பதுளை மாவட் டத்தில் 8வது தக்க வைத்துக்  கொண்டனர்.

 மேலும், ளு. வத்சலா (பேராதனைப் பல்கலைக்கழகம்), மு.மனோபிர~hந்தி (பேராதனைப் பல்கலைக்கழகம்),ளு. புஸ்பகுமார் (கிழக்குபல்கலைக்கழகம்), நு.வினிதா  (கிழக்கு பல்கலைக்கழகம்). யு.சுகனேஸ்வரி (கிழக்கு பல்கலைக்கழகம்), ளு.குமுதினி (தென் கிழக்கு பல்கலைக்கழகம்), ளு.மதிவதனி (தென் கிழக்கு பல்கலைக் கழகம்),  ஆ.நி~hந்தினி (தென் கிழக்கு பல்கலைக்கழகம்), ளு.சௌமியாபானு (தென் கிழக்கு பல்கலைக் கழகம்), P. கீர்த்தனா (தென் கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகிய 12 மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் 2016-06-21 ஆம் திகதி ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை 2016-2020’ என்ற செயல்திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இலங்கை தரம சக்தி சமூக சேவை அமைப்பின் மூலம் தேசகீர்த்தி,தேசபந்து பட்டங்களை வழங்கி அதிபர் கௌரவிக்கபட்டார். அகில இலங்கை ரீதியாக 50 பேர் கௌரவிக்கபட்டனர். அவர்களில் 5 பேர் தமிழரகளாவர் அந்த வகையில் பதுளை மாவட்;டத்தில் எமது பாடசாலை அதிபருக்கே கிடைத்துள்ளது.

பாடசாலை வரலாற்றில் சிற்றுண்டிச் சாலை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய கௌவர அமைச்சர் திரு. யு. அரவிந்தகுமார் அவர்களின் பன்முகபபடுத்தப்பட்ட நிதியில் இருந்து அடிக்கல் நாட்டப்பட்டு 27.03.2017 அன்று திறப்புவிழா செய்து வைக்கப்பட்டது.

 

பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப் பட்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் செய்யப்படடு வருகின்றது.

               இதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென உள்வாங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

2021.05.17 ஆம் திகதி தொடக்கம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.  (நுனஃ01ஃ06ஃ01ஃ28ஃ2021)  2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ.த) பரீட்சை பெறுபேறுகளின் கல்வித்திணைக்கள தரப்படுத்தலின் கீழ் பதுளை மாவட்டத்தில் 3வது இடத்தினையும், மாகாண ரீதியில் 6வது இடத்தினையும் தேசிய ரீதியில் 76 இடத்தினையும் எமது பாடசாலை பெற்றுக்கொண்டது.

 

               இவ்வாறு பல சாதனைகளைப் படைத்து இன்று பதுளை மாவட்டத்தில் முன்னணி பாடசாலையாக பஃஊவாஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் (இடைநிலை பாடசாலை) திகழ்கின்றது.

 

 

 

 

 

 

 

Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • B/Uva Highlands Tamil College, Bandarawela

: (+94)573001818

: (+94)573001818

: [email protected]

Supported By

© 2026 Uva Highlands Tamil College. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk