பாடசாலைக்கீதம்
இறையருள் நிறைதரும் எந்தமிழ் வாழ்கஎழிலுறு கலையகம் வாழ்க! ……. எம்எழிலுறு மலையகம் வாழ்க!பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ்தமிழ் மகா வித்தியாலயம்என்றும் மேலோங்கியே வாழ்க
கவினுறு அறிவியல் செறிந்திடுங் கலைகள்அவைகள் பயின்றிடு (ம்) முறைகள்நெறியினிற் கற்றுமே நேர்மைநிறைகுண சீலராய்ப் பயில்வோம்
திறமையும் பண்பும் ஒழுக்கமும் யாவும்இயல்புடன் வளர்ப்பதெ (ங்) கடனேதுன்பங்கள் எமக்கில்லை என்றேஅன்புடன் திகழ்வோம் நாமே.
அதிபரும் ஆசிரியாளரும் வாழ்கமாணவர் அறிவுடன் திகழ்கஅறிவுடன் செறிந்திடுங் கழகம்புகழுடன் வாழ்க! பல்லூழிவாழ்க வாழ்க வாழ்க வாழியவே!!!