(+94) 573001818
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • Register
  • Login
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்
  • SCHOOL MAP

பள்ளி பற்றி

Toggle navigation

விதிகள்

  • வரலாறு மற்றும் மரபுகள்
  • அடையாளம்
  • விதிகள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. விதிகள்

விதிகள்

  • மாணவர்களுக்கான ஒழுக்க முறைகள்

  • மாணவர்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

  • பாடசாலை ஆரம்பிக்கும் நேரம்      மு.ப. 7.30மணி வகுப்பாசிரியரினால் தயாரிக்கப்பட்ட வகுப்புச் சுத்தம் செய்யும் அட்டவணையின் பிரகாரம் தினமும் வகுப்பறையைச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தல் வேண்டும்.

  • பாடசாலைச் சீருடையில் பாடசாலைக்கு வருகைதரல் வேண்டும்.

  • மாணவர்கள் பாடசாலை இலட்சினை பொருந்திய கழுத்துப்பட்டி அல்லது சேட் அல்லது சட்டை அணிந்து வரவேண்டும்.

  • மாணவர்கள் தமது மாணவர் தொடர்பாடல் புத்தகத்தை(Communication Book) தினமும் கொண்டுவருதல் வேண்டும்.

  • பாடசாலைக்கு வராத மாணவர்கள் Communication Book இல் வராதமைக்கான காரணத்தை பதிவு செய்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பத்துடன் அதிபர் அல்லது பிரதிஅதிபரிடம் காண்பித்து வகுப்பில் அனுமதிப்பதற்கான ஒப்பம் பெற்று அதனை வகுப்பாசிரியரிடம் காட்டிய பின்பே வகுப்பில் அனுமதிக்கப்படுவர்.

  • இரண்டு நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு வராதவர்கள் பெற்றோருடன் சமுகமளிக்க வேண்டும்.

  • வகுப்பாசிரியர்களால் ஒழுங்குபடுத்தப்படும் உணவு அட்டவணைக்கு ஏற்ப நடக்க வேண்டும்.

  • குப்பைகளை உரிய இடத்தில் இடவேண்டும்.

  •  சாப்பாட்டுப் பெட்டியில்(Lunch Box) உணவு கொண்டு வர வேண்டும்.

  • வகுப்பறை, பாடசாலைச் சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதற்கான கட்டளைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.

  • பாடசாலை நேரத்தில் அல்லது பாட வேளையில் வகுப்பை விட்டு வெளியே செல்லக் கூடாது.

  • அவ்வாறு செல்வதாயின் அதற்கான அனுமதி அட்டையை(Exit Card) பெற்றுச் செல்ல வேண்டும்.

  • பாடவேளையின் போதுசிற்றுண்டிச்சாலைக்குசெல்லக்கூடாது.

  • வகுப்பறையில் வகுப்புத் தலைவரின் சொற்படிநடக்கவேண்டும்.

  • ஆய்வு கூடம், நூலகம் போன்றவற்றுக்கு செல்லும் போது ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • நூலகம் செல்லும் மாணவர்கள் பாடவேளை ஆரம்பமாகி 5 நிமிட நேரத்திற்குள் சென்று விட வேண்டும். அவ்வாறு சென்றவர்கள் பாடம் முடியும் வரை  நூலகத்தில் இருத்தல் வேண்டும்.

  • நூலகத்தில் அமைதி பேணப்படல் வேண்டும்.

  • சகல மாணவர்களும் காலை ஒன்று கூடல் நிகழ்வில் தவறாது பங்கு பற்றுதல் வேண்டும்.

  • சகல மாணவர்களும் காலை உடற்பயிற்சி நிகழ்வில் ஈடுபடுதல் வேண்டும்.

  • பாடசாலை ஆரம்ப வேளையிலும் முடியும் வேளையிலும் சமய அனுஷ்டானங்களை ஒழுங்காக அனுசரிக்க வேண்டும்.

  • நகை அணிந்துவரல், கைகளில் தேவையற்ற ஆபரணங்களை அணிந்து வரல், கைக்கடிகாரங்கள் அணிந்துவரல் தவிர்க்கப்படவேண்டும்.

  • கையடக்கத் தொலைபேசி, புகைப்படக் கருவிமற்றும் இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

  • தவணைப்பரீட்சையின் போதும் பொதுப்பரீட்சையின் போதும் பரீட்சை விதிமுறைகளை பின்பற்றிநடத்தல் வேண்டும்.

    பாடசாலையில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் விசுவாசத்துடன் பங்குபற்றல் வேண்டும்.

  • தவணை முடிவில் நடைபெறும் பெற்றோர் சந்திப்பில் பெற்றோர்களைத் தவறாது பங்குபற்றச் செய்தல் வேண்டும்.

  • பாடசாலைச் சட்டதிட்டங்களை அறிந்து அதன்படி ஒழுகுதல் வேண்டும்.

  • பாடசாலைச் சொத்துக்களுக்கு எவ்விதசேதமும் ஏற்படாதவாறுஅவற்றைப் பேணிப் பாதுகாத்தல் வேண்டும்.

  • பாடசாலைக்குவருகைதரும் சமூகத்தினருடன் மனிதநேயத்துடன் நடத்தல் வேண்டும்.

  • பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை மதித்து நடப்பதுடன் சகமாணவர்களையும் மதித்து அவர்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

  • பாடசாலையின் தூரநோக்குமற்றும் பணிக்கூற்றை ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைபத்திருப்பதுடன் அதற்கேற்ப செயற்பட வேண்டும்.

  • ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு இணைப்பாட விதான செயற்பாட்டிலாவது கட்டாயமாக பங்குபற்றுதல் வேண்டும்.

  • பாடசாலையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படாதவாறு நடத்தல் அனைவரதும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்துகொள்ளவேண்டும்.

 

 

பெற்றோர்களுக்கான ஒழுக்க விதிகள்

 

  • தமது பிள்ளைகளைத் தினமும் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
  • தமது பிள்ளைகளின் நலன் கருதி கலந்துரையாட பாடசாலைக்கு வருமாறு அழைக்கப்படும் போது தவறாது பாடசாலைக்குச் சமூகம் தரவேண்டும்.
  • ஒவ்வொரு தவணை இறுதியின் போதும் பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களை பார்வையிட்டு பிள்ளைகளின் நிலைப்பாடு குறித்து வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பெற்றோர் சந்திப்பு நிகழ்வில் தவறாது உரிய நேரத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பாடசாலை அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • பெற்றோர் பாடசாலைக்கு வரும் போது எமது கலாசாரத்தை பேணும் வகையில் ஆடை அணிந்து வரவேண்டும்.
  • தமது பிள்ளைகளின் நலன் கருதி வகுப்பாசிரியருடன் அல்லது பாட ஆசிரியருடன் கலந்துரையாட வேண்டி ஏற்படின் பாடசாலையில் வியாழக்கிழமைகளில் நண்பகல் 12 மணியின் பின்னர் வந்து சந்திக்கலாம்
  • தமது பிள்ளையுடன் அல்லது வகுப்பாசிரியருடன் அல்லது பாட ஆசிரியர் ஒருவருடன் கலந்துரையாட வேண்டிய தேவை ஒரு பெற்றோருக்கு ஏற்படின் அதிபர் அலுவலகத்தில் அது தொடர்பாக தெரியப்படுத்தினால் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்துதரப்படும்.
  • ஒரு பெற்றோர் நேரடியாகவகுப்பறைக்குச் செல்லமுடியாது.
  • தமது பிள்ளைகளின் நடத்தை மற்றும் ஒழுக்க நடைமுறைகளை பெற்றோர் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும்.
  • தாய்மார்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கும் போது சாரி அணிந்து வரவேண்டும்.
  • பாடசாலைக்கு வெளியே தமது பிள்ளைகளின் சகபாடிகள் தொடர்பாகவும் அவர்களின் நடத்தைகோலங்கள் பற்றியும் பெற்றோர்கள் கண்காணிப்பாக இருப்பதுடன் தமது பிள்ளைகளுக்கும் அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்
  • பாடசாலை அபிவிருத்திக்குழுவில் உறுப்புரிமை பெற்று பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவவேண்டும்.
  •  பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு பிள்ளைகளை உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிள்ளைகளை உரிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடசாலை அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.
  • பாடசாலை நிகழ்வுகளுக்கு பங்களிப்புச் செய்யவேண்டும்
  • பாடசாலையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படாது நடந்து கொள்ள வேண்டும்
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • B/Uva Highlands Tamil College, Bandarawela

: (+94)573001818

: (+94)573001818

: [email protected]

Supported By

© 2026 Uva Highlands Tamil College. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk