|
1977.06.10-1978.03.07 |
திரு.S. இராமநாதன் |
![]() |
1977-01-10 ஆந் திகதி இப்பாடசாலையை அரசு பொறுப்பேற்றுக் கொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது. இதன் பின்னர் 1978-03-07 ஆம் திகதி வரை திரு. S. இராமநாதன் அவர்கள் அதிபராக இருந்துள்ளார்.
|
|
1978.03.10-1980.03.03 |
திரு. N. திருச்செல்வம் |
![]() |
1978-03-10 ஆம் திகதி முதல் N. திருச்செல்வம் அவர்கள் பாடசாலை பொறுப்புக்களை ஏற்றுள்ளார். |
|
1980.03.04-1980.09.25 |
திரு. P. நவரட்ணம் |
![]() |
உதவி ஆசிரியராக இருந்த திரு. P. நவரட்ணம் அவர்கள் 1980-03-04 ஆம் திகதி முதல் 1980-09-25 வரை பாடசாலை பொறுப்புக்களை ஏற்று நிறுவகித்துள்ளார்.இக் காலகட்டத்தில் பாடசாலையினுடைய மாணவர் பரம்பலுக்கு ஏற்ப இடவசதி குறைவாகக் காணப்பட்டமையினால் தோட்ட முகாமையாள ராக இருந்த திரு.கூல்மேயர் அவர்களிடம் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் விடுத்த கேகாரிக்கையின் விளைவாக காணித்துண்டு ஒன்று வழங்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்தே இப்பாடசாலை நிர்மாணிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இந்நிலையில் அருட்சகோதரர் ஜோன் மடவெல அவர்கள் இப்பாடசாலையின் நலன் விரும்பியாக செயல்பட்டு இன்னோரன்ன உதவிகளை செய்துள்ளார். |
|
1980.09.26 - 1982.12.31 |
திரு. S. K. செல்வரட்ணம் |
![]() |
1980-09-26 ஆம் திகதி முதல் திரு.S.K.செல்வரட்ணம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 08 வரையிலான வகுப்புகளை நடாத்துவதற்கு இக்காலத்திலே அனுமதி கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் புதுயுகம், புதிய பொழிவு இப்பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலை போசணை பிரதேசத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தேவையான ஆசிரியர் வளம், பௌதிக வளங்கள் கல்வி திணைக்களத்தினால் அவ்வப்போது வழஙகப்பட்டது. பாடசாலை சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது இக்காலமே. இவர் 1982-12-31 ஆம் திகதியன்று ஓய்வு பெற்றார். |
|
1983.01.01 - 1984.09.04 |
திரு. S. M.கந்தையா |
![]() |
1983-01-01 திகதி முதல் திரு. S. N. கந்தையா அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். சிறந்த தலைமைத்துவமும், அனுபவமும் கொண்ட இவர் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து பாடசாலையை வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தின் போது பாடசாலை ஆசிரியர்கள் திடீரென்று தத்தம் ஊர்களுக்கு சென்றதனால் கற்றல் செயல்பாடு சற்று பின்னடைவை நோக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. எனினும், இருக்கின்ற ஆசிரியர் வளத்தைக் கொண்டு 1984-09-04 ஆம் திகதி வரை சிறந்த முறையில் பாடசாலையை நிருவகித்த பெருமை இவருக்குரியதாகும். |
|
1984.09.05 - 1992.10.09 |
திரு. S. செல்வரட்ணம் |
![]() |
1984-09-05ம் திகதி முதல் திரு. S. செல்வரட்ணம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலமே இப்பாடசாலை வரலாற்றில் பொற்காலம் என்று பேசப்படுகிறது. கற்றல், கற்பித்தல், திறன் விருத்தி, இணைப் பாடவிதான செயற்பாடுகள், பாடசாலைக்கான மனிதவளம், பௌதீகவளம் பெற்றுக் கொண்டமை, வாண்மைமிகு பரிபாலணம், பாடசாலைக்கான தனியொரு நன்மதிப்பு, பாடசாலைக்கீதம் இயற்றப்படல், இலட்சினை தயாரிக்கப்படல் போன்ற நடவடிக்கைகள் மிக உயர்வான மட்டத்தில் நடைபெற்ற காலமெனக் கூறலாம். தனக்கென முத்திரைப் பதித்து பாடசாலை நிர்வாகத்தை நடாத்திச் சென்ற இவருக்கு கல்வி திணைக்களம், பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் போன்றோர் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். பாடசாலைக்கீதம் திரு.மலைக்கொழுந்து சண்முகநாதன் அவர்களால் இயற்றப்பட்டு, திருமதி சாமினி இராமநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சாதனைகள் பல செய்து சிறந்த கற்றல் வெளியீடுகளை கொடுத்த சாதனைக்குரிய அதிபராக திகழ்ந்த இவர், பண்டாரவளை கல்வி காரியாலயத்திற்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றார். |
| 1992.10.10-1999.08.25 |
திருமதி T. செல்வரட்ணம் |
![]() |
1992-10-10ம் திகதி முதல் திருமதி T.செல்வரட்ணம் அவர்கள் பாடசாலை நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இவரது காலமும் கனிசமான வளர்ச்சிக் கண்ட காலம் என்றே கூற வேண்டும். இவரது சேவைக் காலத்தில் முழு நேரத்தையும் பாடசாலையினுடைய வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்த பெருந்தகையாக பேசப்படுகிறது. 1995-03-01 ஆந் திகதி மகா வித்தியாலயமாக மாற்றம் பெற்றது. இரு மாடிக் கட்டிடம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், ஆசிரியர் விடுதி அதே போல் க.பொ.த உயர்தர கலை, வர்த்தக பிரிவுகளை 1998ம் ஆண்டு ஆரம்பித்தல், தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மட்டத்தில் முதல் வரிசை இடங்களை பெறக்கூடிய வாய்ப்பு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறுவோர் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்களில் அதி கூடிய கவனம் காட்டினார். 1998-12-16 ஆந் திகதி 1C பாடசாலையாக மாற்றம் பெற்றது. பாடசாலையை வெற்றிப் பாதையை நோக்கி இட்டுச் சென்ற இவர் 1999-08-25ம் திகதி முதல் பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். |
| 1999.08.26-2001.05.16 |
திருமதி. Y. கலையரசி |
![]() |
திருமதி. Y. கலையரசி அவர்கள் 1999-08-26 ஆம் திகதி முதல் 2001-05-16 ஆம் திகதி வரை அதிபராகக் கடமையாற்றினார். சிறிது காலம் பாடசாலை பொறுப்பை நிருவகித்தாலும் சிறந்த முகாமைத்துவ ஆளுமை கொண்டவராக சகல துறை களிலும் பாடசாலையை வழிநடத்திச் சென்றார். இவருடைய காலத்தில் முதன் முறையாக பாடசாலைக் கான கணினித்தொகுதி ஒன்றும், மேலைத்தேய இசைக்கருவி ஒன்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ஆM.சச்சிதானந்தன் அவர்களால் வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கொழும்பு சிங்க சங்கத்தின் உதவியோடு பாடசாலை உபகரணங்கள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தார். இவர் ஹாலி-எல வலயக்கல்வி காரியாலயத்திற்கு பதவியுயர்வு பெற்று சென்றரர் |
| 2001.05.17-2008.02.14 |
திருமதி.E.V.R.சாமுவேல் |
![]() |
2001-05-17ம் திகதி முதல் திருமதி.E.V.R.சாமுவேல் அவர்கள் பாடசாலை பெறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். பாடசாலையின் வளர்ச்சி சகல துறைகளிலும் ஆர்முடுகளாகவே இருந்தது. இந் நிலைக்கண்டு பாடசாலை தொடர்புபட்ட நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதில் பின் நிற்கவில்லை. நவேதயா பாடசாலையாக கல்வி அமைச்சின் மூலம் தரம் உயர்த்தும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தமை பெருமைக்குரியதாகும். இளம்சிறார்களின் முன்பள்ளி கற்றலை தூண்டும் நல் நோக்கம் கருதி பாடசாலை வளாகத்தில் வசந்தம் முன்பள்ளியினை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சகஆசிரியர் சமூகம், மாணவர்கள், பாடசாலை சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஒன்றினைந்து செயற்பட்ட இக்காலக்கட்டத்தில் தான் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கலைத் துறைக்கு செல்வன்.S.சுரேஸ்குமார் அவர்களையும், வர்த்தக துறைக்கு செல்வன். N.ராஜசேகரன் அவர்களையும் பல்கலைக்கழகம் அனுப்ப கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதே போல் கல்வியற்கல்லூரிகளுக்கு பல மாணவர்கள்தெரிவாகினர். கல்வித்துறையில் புரட்சி ஏற்படுவதற்கும், தகவல் தொழிநுட்ப துறை ஆரம்பத்திற்கு அடித்தளமிட்ட காலப்பகுதியாகும். இந்நிலையில் இன்னோரான்ன வழிகளில் பாடசாலையினுடைய வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கல்வி அமைச்சினூடாக அசையாசொத்துகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2007-04-30 ஆந் திகதி நவோத்யா பாடசாலையாக மாற்றம் பெற்றது |




